கோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் புதிய பள்ளி மேலாண்மை குழு தேர்வு

கோவை பீளமேடு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பள்ளியின் முன்னேற்றத்திற்கான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Coimbatore: கோவை மாநகராட்சி பீளமேடு வார்டு எண் 26க்குட்பட்ட பயணியர் மில் ரோட்டில் உள்ள கோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு 2024 ஆம் ஆண்டு கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர் தேர்வு நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியர் தாமஸ் சேவியர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், 26 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி மற்றும் 27 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் அம்பிகா தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு தலைவராக திருமதி பிரியா அவர்களும், 24 உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.



"நம் பள்ளி நம் பெருமை" என்ற கோஷத்தின் அடிப்படையில், மாதந்தோறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை சிறப்பாக நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. தனியார் பள்ளிகளை விட சிறந்த முறையில் மாணவர்களை வளர்ப்பது, 100% தேர்ச்சி பெற வைப்பது, விளையாட்டுத் துறையில் மாணவர்களை ஊக்குவிப்பது போன்ற பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



மேலும், மாதாந்திர கூட்டங்களில் அனைத்து பெற்றோர்களையும் கலந்து கொள்ள வைப்பது, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணிப்பது, மாணவர்களின் பொது அறிவுத் திறன்களை மேம்படுத்துவது போன்ற முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன.



இக்கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். பள்ளியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான இந்த முயற்சி பெரும் வரவேற்பைப் பெற்றது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...