மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றங்கரையில் இளம்பெண் கொடூரமாக கொலை: போலீஸ் தீவிர விசாரணை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றங்கரையில் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கை, கால், வாய் கட்டப்பட்டு நிர்வாணமாக கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அமராவதி ஆற்றங்கரையில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து கிடைத்த தகவலின் பேரில் மடத்துக்குளம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் உடல் கை, கால், வாய் கட்டப்பட்ட நிலையில் நிர்வாணமாக ரத்த வெள்ளத்தில் கிடந்தது.



உடனடியாக பிணத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, கொல்லப்பட்ட பெண் யார், எந்தப் பகுதியைச் சேர்ந்தவர், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை காணும் வகையில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தகவல்கள் கிடைக்கப்பெற்றவுடன் தெரிவிக்கப்படும்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...