உடுமலையில் கிருஷ்ண ஜெயந்தி விழா: 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு கொண்டாட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 6-ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு நடனமாடி, பாடல்கள் பாடி மகிழ்ந்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 6-ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.



தளி ரோட்டில் உள்ள தேஜஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில், 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு கலந்து கொண்டனர்.



குழந்தைகள் கிருஷ்ணர் பாடல்களுக்கு நடனமாடியதோடு, பக்தி பாடல்களையும் பாடி அனைவரையும் கவர்ந்தனர்.



விழாவின் முக்கிய நிகழ்வாக உரியடித்தல் போட்டி நடைபெற்றது. இதில் கிருஷ்ணர், ராதை வேடமிட்ட குழந்தைகள் உற்சாகமாக பங்கேற்று உரியடித்தனர்.

இந்த விழாவில் திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக பொது செயலாளர் வடுகநாதன், இளைஞர் அணி பாலகுரு, இந்து சாம்ராஜ்யம் நிறுவனத் தலைவர் சக்திவேல், விஸ்வ ஹிந்து பரிஷத் உடுமலை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குழந்தைகளின் கலகலப்பான பங்கேற்பால் விழா கோலாகலமாக நடைபெற்றது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...