கோவை கணுவாய் தடுப்பணை புனரமைப்பு: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

கோவை கணுவாய் தடுப்பணையை புனரமைக்க பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தொடங்கி வைத்தார். இப்பணி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும்.



கோவை: கோவை பன்னிமடை ஊராட்சிக்குட்பட்ட கணுவாய் பகுதியில் அமைந்துள்ள கணுவாய் தடுப்பணையை புனரமைப்பதற்கான துவக்க விழா நடைபெற்றது. கெளசிகா நீர்கரங்கள் சார்பில் நடைபெற்ற இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமை வகித்தார்.



இவ்விழாவில் மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன், கோவை நீர்வளத்துறை பாசன உபகோட்டம் உதவி செயற்பொறியாளர் அம்சராஜ் மற்றும் பன்னிமடை ஊராட்சி தலைவர் பி.எஸ்.எம். ரத்தினம் மருதாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட ஆட்சியர் பூமி பூஜை செய்து விழாவை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். கணுவாய் தடுப்பணையை புனரமைக்க கெளசிகா நீர்கரங்கள் சார்பாக ஒரு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுவில் பன்னிமடை ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்துள்ளனர்.

இந்த குழுவினர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 7 மணி முதல் 9 மணி வரை இரண்டு மணி நேரம் கணுவாய் தடுப்பணையை தூர்வாரும் பணியில் ஈடுபடுவர். இதன் மூலம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து வரும் மழைநீர் கணுவாய் தடுப்பணை வழியாக சின்ன வேடம்பட்டி ஏரிக்கு மண்ணரிப்பின்றி செல்ல முடியும்.

இந்த முயற்சியால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, விவசாயம் செழிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...