உடுமலையில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க பொதுக்குழு கூட்டம்: முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

உடுமலையில் நடைபெற்ற தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் கிராம உதவியாளர்களுக்கான பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. புதிய நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. உடுமலை - மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்ற இக்கூட்டம் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.



கூட்டத்தில் கிராம உதவியாளர்களுக்கான பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முக்கியமாக, கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அவர்களை டி பிரிவு பட்டியலில் சேர்க்க வேண்டும், கருணை அடிப்படையில் மறைந்த கிராம உதவியாளர்களின் வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இக்கோரிக்கைகள் அனைத்தும் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.



இந்நிகழ்வில் உடுமலை வட்டக் கிளைக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, வட்டத் தலைவராக கிரி, துணைத் தலைவராக மாரிமுத்து, செயலாளராக பரமேஸ்வரன், துணைச் செயலாளராக அழகிரி, பொருளாளராக கலைச்செல்வி, மாவட்ட பிரதிநிதியாக பழனிச்சாமி மற்றும் திருமதி சுகந்தி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் மாநில சங்க ஆலோசகர்களான மாரியப்பன், மகேந்திரன், திருப்பூர் மாவட்ட தலைவர் நடராஜன், மாவட்ட தணிக்கையாளர் சுப்பிரமணியம், மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் சக்திவேல், மடத்துக்குளம் வட்ட நிர்வாகிகளான கருப்புசாமி, பொன்னுச்சாமி, ராஜலட்சுமி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...