கிணற்றில் விழுந்து உயிரிழந்த தூய்மைப் பணியாளரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர்

கோவை புலுவப்பட்டியில் கிணற்றில் விழுந்து உயிரிழந்த தூய்மைப் பணியாளர் பரணியின் குடும்பத்திற்கு கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொ.ரவி ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார். சம்பவம் ஆகஸ்ட் 31 அன்று நடந்தது.


கோவை: கோவை வடக்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புலுவப்பட்டி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்த பரணி என்பவர் ஆகஸ்ட் 31 அன்று காலை கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்த செய்தியைக் கேள்விப்பட்டதும், கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தார்.

தொ.ரவி, பரணியின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். மேலும், அவர்களுக்கு ஆறுதல் கூறி நிதியுதவியும் வழங்கினார். இந்த சந்திப்பின் போது, தொண்டாமுத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்லப்பன் (எ) சாமிபையன், புலுவப்பட்டி பேரூர் கழக செயலாளர் சின்ராஜ் மற்றும் பல கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...