திருப்பூர் மாவட்டத்தில் கல்குவாரிகள் திறப்பு குறித்த கருத்துக்கேட்பு கூட்டம்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் மொரட்டுப்பாளையம் கிராமத்தில் கல்குவாரிகள் திறப்பது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் இரு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.



Coimbatore: திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கல்குவாரிகள் திறப்பது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் ஊத்துக்குளி வட்டம் மொரட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், உரிமம் புதுப்பித்து மீண்டும் குவாரிகளை இயக்குவது தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டன. கலந்து கொண்டவர்களில் ஒரு தரப்பினர் குவாரி இயக்க அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தினர். மறுபுறம், மொரட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இக்குவாரிகளை நம்பி இருப்பதால் இயக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.



கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் இரு தரப்பு கருத்துக்களையும் பதிவு செய்து கொண்டனர். மேலும், கருத்துக்கேட்பு தொடர்பான தகவல்களை மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்தனர். இந்த கருத்துக்கேட்பு கூட்டம் குவாரிகள் திறப்பது தொடர்பான முடிவெடுக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...