விநாயகர் சதுர்த்தி: மேட்டுப்பாளையத்தில் மேற்கு மண்டல ஐஜி செந்தில் குமார் ஆய்வு

மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை மேற்கு மண்டல ஐஜி செந்தில் குமார் ஆய்வு செய்தார். பொதுக்கூட்டம், சிலை கரைப்பு, ஊர்வலப் பாதைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.


கோவை: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை முன்னிட்டு மேற்கு மண்டல ஐஜி செந்தில் குமார் ஐபிஎஸ் இன்று (செப்டம்பர் 3) மேட்டுப்பாளையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, இந்து முன்னணி சார்பில் நடைபெற உள்ள பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை அவர் பார்வையிட்டார். மேலும், விநாயகர் சிலைகள் கரைக்கப்பட உள்ள பவானி ஆற்றுப் பகுதியையும், ஊர்வலம் செல்லும் பாதைகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது டிஎஸ்பி பாலாஜி, இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். அவர்களிடம் ஐஜி செந்தில் குமார், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், முன்னேற்பாடு பணிகள் குறித்தும் விரிவாக கேட்டறிந்தார்.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது எந்தவித சம்பவங்களும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் காவல்துறை தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று ஐஜி செந்தில் குமார் உத்தரவிட்டார். மேலும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அவர் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...