தொண்டாமுத்தூரில் சின்ன வெங்காய விளைச்சல் அதிகம்; போதிய விலையின்மையால் விவசாயிகள் கவலை

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் சின்ன வெங்காய விளைச்சல் அதிகரித்துள்ளது. ஆனால், போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். விலை உயரும் வரை பட்டறையில் சேமித்து வைக்க முடிவு செய்துள்ளனர்.



Coimbatore: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சின்ன வெங்காயம் நல்ல விளைச்சல் கிடைத்துள்ளது. ஆனால், போதுமான விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

தொண்டாமுத்தூர் பகுதியில் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. செம்மண் நிலத்தில் ஏக்கருக்கு 5 டன்னும், களிமண் நிலத்தில் 3 டன்னும் விளைச்சல் கிடைத்துள்ளது. ஆனால், தற்போது கிலோ ரூ.7 முதல் ரூ.10 வரை மட்டுமே விலை கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.



இந்த நிலையில், விலை உயரும் வரை பட்டறையில் வெங்காயத்தை சேமித்து வைக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். ஆனால், பட்டறையில் சேமிக்கும்போது காலநிலை மாற்றம், அதிக மழை, காற்றோட்டமின்மை போன்ற காரணங்களால் வெங்காயம் கெட்டுப்போகும் அபாயம் உள்ளது.

இதனைத் தடுக்க, பட்டறையில் வெங்காயத்தை பாதுகாப்பாக சேமிக்கும் முறைகள் குறித்து வேளாண்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சின்ன வெங்காயத்திற்கு கிலோவுக்கு ரூ.50 முதல் ரூ.80 வரை நிலையான விலை நிர்ணயிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

விதை, உரம், மருந்து, பாசனம், கூலி என அனைத்து செலவுகளும் அதிகரித்துள்ள நிலையில், தற்போதைய குறைந்த விலை விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துவதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, சின்ன வெங்காயத்திற்கு நியாயமான விலை நிர்ணயிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...