விநாயகர் சதுர்த்தி: டாஸ்மாக் கடைகளுக்கு இரு நாள் விடுமுறை வேண்டும் - இந்து முன்னணி கோரிக்கை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டு நாள் விடுமுறை வேண்டும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் 16.5 லட்சம் விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என தெரிவித்தார்.



திருப்பூர்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த காடேஸ்வரா சுப்பிரமணியம், "தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் ஒன்றரை லட்சம் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட உள்ளது. பொதுமக்கள் தன்னெழுச்சியாக வீடுகள் மற்றும் தங்கள் பகுதிகளில் 15 லட்சம் சிலைகள் வைத்து கொண்டாட உள்ளனர்" என்றார்.

திருப்பூரில் நான்காவது நாளும், கோவையில் ஐந்தாம் நாளும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட உள்ளதாக தெரிவித்தார். "விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு கடிதம் கொடுத்துள்ளோம். மற்ற மத பண்டிகைகள் போல இந்துக்களின் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதோடு கொண்டாடவும் அழைப்பு விடுத்துள்ளோம்" என்றார்.

திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 1500 இடங்களில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து கொண்டாடப்பட உள்ளதாகவும், திருப்பூரில் நடைபெறும் விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்கிறார் எனவும் தெரிவித்தார்.

மேலும், "விநாயகர் சிலைகள் வைக்க சில பகுதிகளில் போலீசார் மூலம் நெருக்கடி தரப்படுவதாகவும், இதனை தவிர்க்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார். "உளவுத்துறை மூலம் திருப்பூரில் வாழும் வங்கதேசத்தினரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் கோரிக்கை விடுத்தார். நிகழ்வில் இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...