உடுமலையில் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' விநாயகர் சிலை: நடிகர் லாரன்ஸ் பாராட்டு

உடுமலையில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, மண்பாண்ட கலைஞர் ரஞ்சித் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' விநாயகர் சிலை உருவாக்கி, நடிகர் லாரன்ஸின் பாராட்டைப் பெற்றார். லாரன்ஸ் விரைவில் ரஞ்சித்தை நேரில் சந்திக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூளவாடி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்ற மண்பாண்ட கலைஞர், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தில் இடம்பெற்ற விநாயகர் சிலையை களிமண்ணால் உருவாக்கி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான ரஞ்சித், சில நாட்களுக்கு முன்னர் 'வேட்டையன்' படத்தில் இடம்பெற்ற விநாயகர் சிலையை உருவாக்கி கவனம் ஈர்த்தார். தற்போது, 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தில் இடம்பெற்ற விநாயகர் சிலையை மிகவும் அழகாக வடிவமைத்துள்ளார்.



இந்த சிலையின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த நிலையில், 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தின் நாயகன் நடிகர் லாரன்ஸ் தனது X தளத்தில் இதனைப் பகிர்ந்து ரஞ்சித்தின் கலைத் திறமையைப் பாராட்டியுள்ளார். மேலும், மிக விரைவில் ரஞ்சித்தை நேரில் சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.



லாரன்ஸின் இந்த பாராட்டும் அறிவிப்பும் ரஞ்சித்துக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இவரது கலைப்படைப்புகள் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...