கோவை செட்டி வீதி அருகே இளைஞர் துரத்தி வெட்டிக் கொலை

கோவை செட்டி வீதி அருகே, மது போதையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக கெம்பட்டி காலனியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் கோகுல் துரத்தப்பட்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பாலாஜி அவென்யூ பகுதியில் நடந்த இச்சம்பவத்தில் அரிவாள் மற்றும் கட்டை பயன்படுத்தப்பட்டது.


கோவை: கோவை செட்டி வீதி அருகே இளைஞர் ஒருவர் துரத்தப்பட்டு வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கெம்பட்டி காலனியைச் சேர்ந்த கோகுல் (24) என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். மது போதையில் ஏற்பட்ட வாக்குவாதமே இந்த கொலைக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

பாலாஜி அவென்யூ பகுதியில் கோகுலை எதிர்தரப்பு இளைஞர்கள் துரத்தியதாகவும், பின்னர் அரிவாளால் வெட்டியும் கட்டையால் தாக்கியும் கொலை செய்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையாக காயமடைந்த நிலையில், ரத்தம் வடிந்தபடி ஓடி ஒளிந்த கோகுல் உயிரிழந்துள்ளார். சாலையில் தெரிந்த ரத்தத்தைப் பின்தொடர்ந்து சென்ற பொதுமக்கள், இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த செல்வபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கோகுலின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலையில் ஈடுபட்டவர்களை கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...