கோவை குற்றப்பிரிவு டி.எஸ்.பி. மீது கட்டப்பஞ்சாயத்து குற்றச்சாட்டு: வியாபாரி பரபரப்பு புகார்

கோவையில், தேங்காய் வியாபாரி பிரகாஷ், மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. தன்மீது போலி வழக்குகள் பதிந்து கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.



கோவை: கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியைச் சேர்ந்த தேங்காய் வியாபாரி பிரகாஷ் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.



தன்மீது போலியான வழக்குகள் பதியப்பட்டிருப்பதாகவும் கோவை மாவட்ட குற்றபிரிவு டி.எஸ்.பி கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதாகவும் செய்தியாளர்களிடம் குற்றம் சாட்டினார்.



பிரகாஷ் கூறியதாவது: "குமரவேல் மற்றும் ரவிகுமார் என்பவர்களுடன் நீண்டகாலமாக கொப்பரை மற்றும் தேங்காய் வியாபாரம் செய்து வந்தேன். குமரவேல் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக கூறி என்னிடம் வாங்கிய பணத்தை திருப்பித் தராமல் தலைமறைவாகிவிட்டார். குமரவேல் மற்றும் ரவிகுமார் குறித்து விசாரித்ததில் இருவரும் பலரிடம் பணம் பெற்றிருப்பது தெரியவந்தது."

"இந்நிலையில் குமரவேல் மற்றும் ரவிகுமார் ஆகியோர் கோவை மாவட்ட குற்றப்பிரிவில் சில அதிகாரிகளின் துணையுடன் என் மீது போலி புகார்கள் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக கோவை மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி.யிடம் நேரில் ஆஜராகி அனைத்து ஆவணங்களையும் சமர்பித்தேன். ஆனால் டி.எஸ்.பி. அதனை ஏற்காமல் காலதாமதம் செய்வதோடு பணத்தை செட்டில்மெண்ட் செய்யச்சொல்லி கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுகிறார்," என்று பிரகாஷ் குற்றம்சாட்டினார்.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக காவல்துறை தலைவரை சந்தித்து புகார் அளித்துள்ளதாகவும், தற்போது மேற்கு மண்டல காவல்துறை தலைவரையும் நேரில் சந்தித்து புகாரளிக்க வந்ததாகவும் பிரகாஷ் தெரிவித்தார்.

"வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதை கட்டுப்படுத்தவில்லை என்றால் எங்களைப் போன்ற வியாபாரிகள் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை," என்று பிரகாஷ் வேதனையுடன் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...