மேட்டுப்பாளையம் உதகை சாலையில் சிமெண்ட் லாரியில் திடீர் தீ விபத்து: ஓட்டுநர் உயிர் தப்பினார்

மேட்டுப்பாளையம் உதகை சாலையில் சிமெண்ட் லாரியில் திடீரென தீ பற்றி எரிந்தது. ஓட்டுநர் சுயாதீனமாக தப்பித்தார். தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.



கோவை: மேட்டுப்பாளையம் உதகை சாலையில் சிமெண்ட் லாரி ஒன்றில் திடீரென தீ பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுநர் உயிர் தப்பினார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு குடோனில் சிமெண்ட் மூட்டைகளை இறக்கிவிட்டு, அரியலூர் நோக்கி திரும்பிக் கொண்டிருந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த லாரி ஒன்று, உதகை சாலையில் சின்ன பள்ளி வாசல் அருகே வந்தபோது திடீரென முன்பக்கத்தில் தீ பற்றி எரியத் தொடங்கியது.



இதனால் அதிர்ச்சி அடைந்த லாரி ஓட்டுநர், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த முனியசாமி, உடனடியாக லாரியை சாலையின் நடுவே நிறுத்திவிட்டு அங்கிருந்து இறங்கி தப்பினார். பின்னர் லாரியின் முன்பகுதி வேகமாக எரியத் தொடங்கியது.

சம்பவத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் தண்ணீரை கொண்டு வந்து தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் கட்டுப்படுத்த முடியவில்லை. உடனடியாக மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.



சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள், பெரும் முயற்சிக்குப் பிறகு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மேட்டுப்பாளையம் உதகை சாலையில் இந்த சம்பவம் நடந்ததால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகினர். லாரியில் திடீரென எப்படி தீ பற்றியது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...