பெள்ளாதி குளத்தில் மீன்பிடிப்பதற்கான ஒப்பந்தம் குறித்து சர்ச்சை: மீனவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்

காரமடை அருகே பெள்ளாதி குளத்தில் மீன்பிடி ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், புதிய ஒப்பந்தம் குறித்து சர்ச்சை எழுந்தது. அதிகாரிகள் தலையீட்டால் இரண்டு நாட்களுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள பெள்ளாதி குளத்தில் மீன்பிடிப்பதற்கான ஒப்பந்தம் தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதனால் மீன்பிடிக்க வந்த மீனவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெள்ளாதி குளம் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த குளத்தில் ஒப்பந்த அடிப்படையில் மீன் பிடிக்க மீன்வளத்துறை அனுமதி அளித்து வந்தது. கடந்த ஜூலை மாதத்துடன் முந்தைய ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், மேட்டுப்பாளையம் மீனவ கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இன்று பெள்ளாதி குளத்திற்கு மீன்பிடிக்க படகுகள் மற்றும் வலைகளுடன் வந்தனர்.

ஆனால், முந்தைய ஒப்பந்ததாரர் மோகன்ராஜ் என்பவர் அவர்களை தடுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனையடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த காரமடை போலீசார், மீன்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.



பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்படாத நிலையில், இரு தரப்பினரும் இரண்டு நாட்களுக்கு பெள்ளாதி குளத்தில் மீன்பிடிக்க மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். மேலும், யாரும் குளத்தில் மீன்பிடிக்காமல் இருக்க கண்காணிக்கும் பொருட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இரண்டு நாட்களில் பெரும்பாலான மீனவர்களின் கருத்தை கேட்டு, அதன் அடிப்படையில் மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இதனால், ஒப்பந்த காலம் முடிந்ததால் மீன் பிடித்து விடலாம் என நினைத்து வலைகளுடன் வந்த மீனவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...