கோவை வழியாக ஹூப்ளி - கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

கர்நாடகாவின் ஹூப்ளியில் இருந்து கேரளாவின் கொச்சுவேலி வரை கோவை வழியாக சிறப்பு ரயில் சேவை செப்டம்பர் 13 முதல் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


Coimbatore: கர்நாடக மாநிலம் ஹூப்ளி மற்றும் கேரள மாநிலம் கொச்சுவேலி இடையே கோவை வழியாக சிறப்பு ரயில் சேவை இயக்கப்படவுள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு ரயில் சேவை குறித்த விவரங்களை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர். அதன்படி, ஹூப்ளி - கொச்சுவேலி சிறப்பு ரயில் (எண்: 07333) செப்டம்பர் 13 ஆம் தேதி காலை 6:55 மணிக்கு ஹூப்ளியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6:45 மணிக்கு கொச்சுவேலி நிலையத்தை சென்றடையும்.

திரும்பும் பயணத்தில், கொச்சுவேலி - ஹூப்ளி சிறப்பு ரயில் (எண்: 07334) செப்டம்பர் 14 ஆம் தேதி நண்பகல் 12:50 மணிக்கு கொச்சுவேலியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12:50 மணிக்கு ஹூப்ளி நிலையத்தை வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில் பின்வரும் முக்கிய நிலையங்களில் நின்று செல்லும்: கொல்லம், காயன்குளம், செங்கன்னூர், திருவல்லா, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு மற்றும் பிரூர்.

இந்த சிறப்பு ரயில் சேவை மூலம் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களை இணைக்கும் வகையில் பயணிகளுக்கு பெரும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...