மேட்டுப்பாளையம் அருகே சிறுத்தை நடமாட்டம்: கால்நடைகளை வேட்டையாடுவதால் மக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம் அருகே சென்னாமலை கரடு வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் கால்நடைகளை வேட்டையாடுவதால் மலையடிவார கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட சென்னாமலை கரடு பகுதியில் அண்மைக்காலமாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருவதால் சென்னா மலை கரடு வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.



சென்னா மலை கரடு வனத்தின் அடிவார கிராமமாக உள்ள அறிவொளி நகர், வெள்ளிப்பாளையம், கரட்டுமேடு, மோத்தேபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில மாதங்களாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரிக்க துவங்கியுள்ளது. மலை அடிவாரப் பகுதியில் உள்ள விவசாய தோட்டங்கள் மற்றும் கிராமங்களில் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் வளர்ப்பு அதிகம் உள்ள நிலையில் அதனை குறிவைத்து கால்நடைகளை சிறுத்தைகள் வேட்டையாடி வருகிறது.



கடந்த இரண்டு மாதங்களில் ஆடுகளை வேட்டையாடி தூக்கி செல்வதுடன் பசு மாடுகளை தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளது. அறிவொளி நகர் பகுதியை சேர்ந்த துளசியம்மாள் என்பவர் வளர்த்து வந்த கன்று குட்டியை சிறுத்தை தாக்கியதில் அதன் கழுத்து மற்றும் முதுகு பகுதிகளில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் காவலுக்கு வளர்க்கப்படும் நாய்களையும் இழுத்து சென்றுவிட்டதாக கூறும் அப்பகுதி மக்கள் வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். ஏற்கனவே கடந்த மாதம் வெள்ளிப்பாளையம் கிராமத்தில் சிறுத்தை ஒன்று அந்த பகுதியில் இருந்த விவசாய தோட்டத்தில் நுழைந்த வீடியோ காட்சிகள் வெளியாகி இருந்த நிலையில் அதன் வேட்டை தொடர்வதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே தொடர்ந்து பொதுமக்களையும் கால்நடைகளையும் அச்சுறுத்தி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



இதனையடுத்து மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏகே செல்வராஜ் அறிவொளி நகர் பகுதியில் நேற்று இரவு ஆய்வு செய்தார். அப்போது சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும் பொதுமக்களை விரட்டி அச்சுறுத்துவதாக புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மேட்டுப்பாளையம் வனத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்ட சட்டமன்ற உறுப்பினர் உடனடியாக சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க அவர் அறிவுறுத்தினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...