பொள்ளாச்சி மீனாட்சிபுரத்தில் மதுபான கூடத்தை இடமாற்ற இந்து முன்னணி வலியுறுத்தல்

பொள்ளாச்சி அருகே மீனாட்சிபுரத்தில் உள்ள மதுபான கூடத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என இந்து முன்னணி அமைப்பினர் சப்-கலெக்டரிடம் மனு அளித்தனர். பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் பாதிப்புக்குள்ளாவதாக குற்றச்சாட்டு.


கோவை: பொள்ளாச்சி அருகே மீனாட்சிபுரத்தில் உள்ள மதுபான கூடத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என இந்து முன்னணி அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

ஆனைமலை இந்து முன்னணி மாவட்ட செயலாளர் நந்தகுமார் தலைமையில் நிர்வாகிகள் நேற்று (செப்டம்பர் 13) சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது, ஆனைமலை அருகே, திவான்சாபுதூர் ஊராட்சி மீனாட்சிபுரத்தில், தமிழக - கேரளா நெடுஞ்சாலையில் ஏற்கனவே ஒரு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. தற்போது புதிதாக மற்றொரு மதுபானக் கூடம் திறக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் ஏராளமான கூலித் தொழிலாளர்களும், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களும் அதிகம் வசிக்கின்றனர். இதனால் பள்ளி மாணவ-மாணவியர் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்கள் மிகுந்த பாதிப்புக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகும் சூழல் உருவாகியுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்பகுதியில் உள்ள மதுபான கூடத்தை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என இந்து முன்னணி அமைப்பினர் தங்களது மனுவில் வலியுறுத்தியுள்ளனர். இந்த மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாக தெரிகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...