கோவை நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை தாக்கி பசுமாடு பலி: பொதுமக்கள் அச்சம்

கோவை நாயக்கன்பாளையத்தில் இரவு நேரத்தில் காட்டு யானை ஒன்று தோட்டத்தில் புகுந்து பசுமாட்டை கொன்றது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கன்பாளையத்தில் ஒற்றை காட்டு யானை ஒன்று இரவு நேரத்தில் தோட்டத்தில் புகுந்து பசுமாட்டை கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு சுமார் 1 மணியளவில், நாயக்கன்பாளையம் பகுதியில் வசிக்கும் செல்வராஜ் என்பவரின் தோட்டத்திற்குள் ஒரு காட்டு யானை நுழைந்தது.



அங்கிருந்த பயிர்களை சேதப்படுத்திய யானை, தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த ஒரு பசுமாட்டை தனது தந்தத்தால் குத்தி கொன்றது.

இச்சத்தத்தைக் கேட்டு விழித்தெழுந்த செல்வராஜ், உடனடியாக பெரியநாயக்கன்பாளையம் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காட்டு யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை அடிவாரப் பகுதிகளான கோவணூர், நாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் அடிக்கடி ஊடுருவி பயிர்களை சேதப்படுத்துவது வழக்கமாக உள்ளது. ஆனால் இம்முறை ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, காட்டு யானைகள் தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையாமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...