கேரள மீன் கழிவுநீரை பொள்ளாச்சி அருகே கொட்டிய வாகனம் சிறைப்பிடிப்பு

கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மீன் கழிவுநீர் பொள்ளாச்சி அருகே கோமங்கலம்புதூர் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டப்பட்டது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர். வாகனம் காவல் நிலையத்தில் சிறைப்பிடிக்கப்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோமங்கலம்புதூர் தேசிய நெடுஞ்சாலையில் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மீன் கழிவுநீர் கொட்டப்பட்டதை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். சம்பவம் குறித்த விவரம்:

நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவருக்கு சொந்தமான வாகனத்தில், கோழிக்கோட்டில் இருந்து தூத்துக்குடி பகுதியில் உள்ள எம்பிஎன் என்ற தனியார் நிறுவனத்திற்கு மீன் எண்ணெய் மற்றும் கோழி தீவனம் தயாரிப்பதற்காக மீன் கழிவுநீர் கொண்டு செல்லப்பட்டது. இந்த வாகனத்திலிருந்து மீன் கழிவுநீர் கோமங்கலம்புதூர் தேசிய நெடுஞ்சாலையில் திறந்து விடப்பட்டது.



இதனைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக வாகனத்தை தடுத்து நிறுத்தி, கோமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வாகனத்தை கைப்பற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து கோமங்கலம் பகுதி பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில், "கேரளா மாநிலத்தில் இருந்து கோழி இறைச்சி, மருத்துவ கழிவுகள் மற்றும் மீன் கழிவுகள் தமிழக பகுதிகளில் அடிக்கடி கொட்டப்பட்டு வருகின்றன. இது போன்ற நடவடிக்கைகள் சுற்றுச்சூழலுக்கும், மக்களின் ஆரோக்கியத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே, இத்தகைய செயல்களை உடனடியாக தடை செய்ய வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...