திருச்சியில் கோவை மெட்டல் எம்.மணி - சரஸ்வதி மணி சிலைகளை திறந்து வைத்தார் திமுக செயலாளர் நா.கார்த்திக்

திருச்சி ஜெயங்கொண்டானில் கோவை மெட்டல் எம்.மணி - சரஸ்வதி மணி திருவுருவச் சிலைகள் திறப்பு விழா நடைபெற்றது. திமுக செயலாளர் நா.கார்த்திக் சிலைகளை திறந்து வைத்தார். ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையும் திறக்கப்பட்டது.


Coimbatore: திருச்சி ஜெயங்கொண்டானில் (சேங்கனம்) இன்று (செப்டம்பர் 16) காலை, கோவை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவர் கோவை மெட்டல் எம்.ராஜா அவர்களின் பெற்றோர் கோவை மெட்டல் எம்.மணி மற்றும் சரஸ்வதி மணி ஆகியோரின் திருவுருவச் சிலைகள் திறப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்.எல்.ஏ.) கலந்து கொண்டு சிலைகளை திறந்து வைத்தார். முன்னதாக அவர் திமுக கொடியையும் ஏற்றி வைத்தார்.



அதேவேளையில், கோவை ஜென்னி ரெசிடன்சி, பிளாக் தண்டர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு.வின்சென்ட் அடைக்கலராஜ், ஜெயங்கொண்டான் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கோவை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மெட்டல் எம்.ராஜா, வசந்தி ராஜா, ஆர்.தீபக்குமார், கே.எல்.வெங்கடேஷ், நிவேதா மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...