பெரிய நெகமத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் பொள்ளாச்சி எம்பி கே.ஈஸ்வரசாமி

கோவை மாவட்டம் பெரிய நெகமத்தில் ரூ.90 லட்சத்திற்கும் மேலான மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை பொள்ளாச்சி எம்பி கே.ஈஸ்வரசாமி தொடங்கி வைத்தார். சாலைப் பணிகள், சுகாதார நிலையம் மற்றும் சிறுவர் பூங்கா உள்ளிட்ட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.


Coimbatore: கோவை மாவட்டம் பெரிய நெகமத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி செப்டம்பர் 16 அன்று தொடங்கி வைத்தார்.

ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் பெரிய நெகமம், பல்லடம் சாலை - சந்திராபுரம் சாலை இணைப்பு சாலைக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எம்பி கே.ஈஸ்வரசாமி கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.



இதேபோல, பெரிய நெகமம், காளியப்பன்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் இருந்து வாய்க்கால் மேடு வரை சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியும் நடைபெற்றது.



கோவை தெற்கு மாவட்டம், நெகமம் பேரூர் கழக பகுதியில் ரூ.72 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நெகமம் பல்லடம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சாய் கே.வி.கே ரெசிடென்சியில் சிறுவர் பூங்கா திறப்பு விழா நிகழ்ச்சியையும் எம்பி கே.ஈஸ்வரசாமி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் திமுக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...