நவராத்திரி பண்டிகைக்கு கோவையில் கொலு பொம்மைகள் விற்பனை சூடுபிடிப்பு

கோவையில் நவராத்திரி பண்டிகைக்கு முன்னதாக கொலு பொம்மைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுகிறது. புதிய வகை பொம்மைகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.



Coimbatore: நவராத்திரி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், கோவையில் கொலு பொம்மைகள் விற்பனை சூடுபிடித்துள்ளது. அக்டோபர் 3 முதல் 10 நாட்கள் நடைபெறும் இப்பண்டிகையில் கொலு பொம்மைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

கோயில்களிலும் வீடுகளிலும் காட்சிப்படுத்தப்படும் இந்த கொலு பொம்மைகள் பொதுவாக ஏதேனும் ஒரு கருத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்படுகின்றன. அஷ்டலட்சுமி, தசாவதாரம் போன்றவை மிகவும் பிரபலமான கொலு பொம்மைகளாக உள்ளன.



இந்த ஆண்டு புதிய வரவாக அயோத்தி ராமர், பூரி ஜெகன்நாதர், பஞ்சுமிட்டாய், தாயக்கட்டை போன்ற கொலு பொம்மைகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. கோவை மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் வந்து ஆர்வத்துடன் கொலு பொம்மைகளை வாங்கிச் செல்கின்றனர்.

முந்தைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு கொலு பொம்மைகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாகவும், மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பொம்மைகளை வாங்குவதாகவும் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...