கோவை அன்னூர் அருகே குற்றவாளி குண்டர் சட்டத்தின் கீழ் கைது

கோவை மாவட்டம் அன்னூர் அருகே கோவில் பாளையம் பகுதியில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட ரவீந்திரன் என்பவரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.


Coimbatore: கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கோவில் பாளையம் பகுதியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

அண்மையில் கோவில் பாளையம் பகுதியில் கல்லூரி மாணவர்களிடம் வழிப்பறி செய்ததாக ஒரு கும்பல் போலீசாரால் கைது செய்யப்பட்டது. அதில் ரவீந்திரன் என்பவரும் ஒருவர். இவர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு பின்னர் வெளி மாநிலங்களுக்கு தப்பி சென்று பதுங்கி இருந்துள்ளார்.

கடந்த மாதம் கோவில் பாளையம் பகுதியில் வழிப்பறி செய்து விட்டு சிம்லா சென்று பதுங்கி இருந்த ரவீந்திரனை கோவில் பாளையம் போலீசார் அங்கு சென்று கைது செய்து காவல்நிலையம் அழைத்து வந்தனர். அப்போது போலீசிடம் இருந்து தப்ப முயன்று பள்ளத்தில் விழுந்த ரவீந்திரனுக்கு மாவு கட்டு போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவீந்திரன் மீது கோவில் பாளையம் போலீசார் தற்போது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த தகவல் சிறையில் உள்ள ரவீந்திரனுக்கு கோப்புகளாக வழங்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...