கலைஞர் புத்தக விநியோக வழக்கு: கோவை நீதிமன்றத்தில் திமுக செயலாளர் நா.கார்த்திக் ஆஜர்

கோவை நீதிமன்றத்தில் திமுக செயலாளர் நா.கார்த்திக் ஆஜரானார். 2014ல் கலைஞரின் புத்தகத்தை விநியோகித்தபோது அதிமுக மன்றத்தை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கு குறித்து விசாரணை நடைபெற்றது.


Coimbatore: கோவை மாநகர மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ), சனிக்கிழமை (21.09.2024) காலை கோவை ஜே.எம். 1 நீதிமன்றத்தில் ஆஜரானார். 2014ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி எழுதிய "ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்" என்ற புத்தகத்தை பொதுமக்களுக்கு விநியோகித்த போது, அதிமுக மன்றத்தை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கு குறித்து விசாரணை நடைபெற்றது.

இந்த சம்பவம் கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் நடந்தது. புத்தக விநியோகத்தின் போது, அருகிலிருந்த அதிமுக மன்றம், அதன் பெயர்ப்பலகை மற்றும் கொடிக்கம்பத்தை அடித்து உடைத்ததாகவும், அங்கிருந்த அதிமுக நிர்வாகிகளை தாக்கியதாகவும் நா.கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை பொய் வழக்கு என திமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.



நீதிமன்றத்திற்கு வந்த நா.கார்த்திக்குடன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வே.பாலசுப்பிரமணியன், திமுக பொதுக்குழு உறுப்பினர் இரா. மணிகண்டன், வழக்கறிஞர்கள் அகஸ்டஸ், ப.கிருஷ்ணமூர்த்தி, மாநகர மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அன்புச் செழியன், மாநகர மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் மருது பாண்டியன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.



மேலும், மாநகர மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் கே.ஆர்.ராஜா, பல்வேறு வட்டக்கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...