திமுக பவள விழா: கோவை 5-வது வார்டில் மாபெரும் மருத்துவ முகாம்

திமுக பவள விழாவை முன்னிட்டு கோவை மாநகராட்சி 5-வது வார்டில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி முகாமை துவக்கி வைத்தார். சுமார் 1000க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைய உள்ளனர்.



Coimbatore: திமுக பவள விழாவை முன்னிட்டு கோவை மாநகராட்சி 5-வது வார்டில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி துவக்கி வைத்தார்.

சரவணம்பட்டி பகுதிக்கு உட்பட்ட விஸ்வாசபுரத்தில் 5-வது வார்டு திமுக, லயன்ஸ் பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்ட், முத்துஸ் மருத்துவமனை ஆகியவை இணைந்து இந்த மருத்துவ முகாமை ஏற்பாடு செய்தன. துணை செயலாளர் அசோக்பாபு ஆறுக்குட்டி, சிறுபான்மை உரிமை பிரிவு மாவட்ட தலைவர் ஆரோக்கிய ஜான், பகுதி கழக செயலாளர் பொன்னுசாமி, மாமன்ற உறுப்பினர் நவீன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.



இந்த மருத்துவ முகாம் குறித்து வார்டு செயலாளர் கண்ணன் கூறுகையில், "இந்த முகாமில் குழந்தைகள் பொதுநல பரிசோதனை, சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த பரிசோதனை, ஆறாத புண் மற்றும் சர்க்கரை நோயினால் ஏற்பட்ட புண்களுக்கு சிகிச்சை, கை, கால், மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கான ஆலோசனை, இருதய மாரடைப்பு சிகிச்சைகளுக்கான ஆலோசனை, பித்தப்பை கல் மற்றும் குடல் இறக்கம் உள்ளிட்ட பல்வேறு நோய்களை கண்டறிதல் மற்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது," என்றார்.

முகாம் காலை 9 மணி முதல் மாலை வரை நடைபெற்றது. இந்த வார்டுக்கு உட்பட்ட சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த மருத்துவ முகாமில் பயனடைய உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த மருத்துவ முகாமில் துணை செயலாளர் வி.சுந்தரராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...