கோவை கொங்கு நண்பர்கள் சங்கம் சார்பில் மாணவர்களுக்கு பாராட்டு விழா

கோவையில் கொங்கு நண்பர்கள் சங்கம் சார்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், தேசிய அளவில் சாதனை படைத்த மாணவர்களுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது. ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜ் பரிசுகள் வழங்கினார்.


Coimbatore: கோவை கொங்கு நண்பர்கள் சங்கம் சார்பாக 2023-2024-ம் கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் பிற துறைகளில் தேசிய அளவில் சாதனை படைத்த மாணவ, மாணவியர்களை ஊக்குவிக்கும் விதமாக கோவை நவ இந்தியாவில் உள்ள தனியார் கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினார். மேலும் அதனை தொடர்ந்து இந்த விழாவில் வின்னர்'ஸ் இண்டியா நிறுவனர் C.K கண்ணன் நான்கு மாணவர்களுக்கு தலா இரண்டு சென்ட் நிலங்களை இலவசமாக வழங்கினார்.



நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற தமிழ்நாடு காவல்துறை தலைவர் பாரி IPS, டாலர் குரூப் ராமமூர்த்தி, கோவை கொங்கு நண்பர்கள் சங்கம் தலைவர் ராஜ்குமார், துணை தலைவர் நந்தகுமார், இணைச் செயலாளர் லோகநாதன், செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் அழகேசன், இந்துஸ்தான் கல்விக் குழுமம் சரஸ்வதி கண்ணையன் ஆகியோர் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...