காரமடையில் தமிழர் தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் தமிழர் தேசம் கட்சி தலைவர் கே கே எஸ் செல்வகுமார் வீட்டில் போலீஸ் சோதனை நடத்தியதைக் கண்டித்து காரமடையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியினர் போலீஸ் நடவடிக்கையை திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் என குற்றம்சாட்டினர்.


கோவை: காரமடை கார் ஸ்டேன்டு பகுதியில் தமிழர் தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சியில் தமிழர் தேசம் கட்சியின் மாநில தலைவர் கே கே எஸ் செல்வகுமார் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதைக் கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வீர முத்தரையர் முன்னேற்ற சங்க கோவை மாவட்ட அமைப்பாளர் கண்டியூர் முருகேசன் மற்றும் தமிழர் தேசம் கட்சியின் மாவட்ட செயலாளர் கோவை முருகேசன் ஆகியோர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கே கே எஸ் செல்வகுமார் குற்ற பின்னணி கொண்டவராக காவல்துறையில் அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தமிழர் தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.



ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், தங்கள் சமுதாய தலைவர் மீதும் சமூகப் போராளி மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கி அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திருச்சி மாநகர காவல் துறையினர் செயல்படுவதாக குற்றம் சாட்டினர். மேலும், கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.

சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் தேசம் கட்சி பாரதிய ஜனதா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து கூட்டணி வைத்த நிலையில், அந்தக் கட்சியின் தலைவரை குறிவைத்து தற்போது வீட்டில் சோதனை நடத்துவதும், குற்ற வழக்குகளில் அவரது பெயரை சேர்ப்பதும் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...