கோவை இராமநாதபுரம் பகுதியில் திட்டப்பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர்

கோவை மாநகராட்சி ஆணையர் M சிவகுரு பிரபாகரன் இராமநாதபுரம் பகுதியில் நடைபெறும் பல்வேறு திட்டப்பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். குடிநீர் திட்டம், வார்டு அலுவலகம், திருமண மண்டபம் புனரமைப்பு உள்ளிட்ட பணிகளை விரைவுபடுத்த உத்தரவிட்டார்.



கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட இராமநாதபுரம் பகுதியில் நடைபெற்றுவரும் பல்வேறு திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் IAS அவர்கள், இன்று (25.09.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட ஐந்து மண்டலங்களிலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநகராட்சி ஆணையாளர் தினசரி களஆய்வு மேற்கொண்டு பணிகளின் முன்னேற்றத்தை கண்காணித்து வருகிறார்.



மத்திய மண்டலம், வார்டு எண் 63-க்குட்பட்ட இராமநாதபுரம், அங்கண்ணன் லே-அவுட் பகுதியில் சூயஸ் 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகளை ஆணையாளர் ஆய்வு செய்தார்.



பணிகளை விரைவில் முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



இராமநாதபுரம், இராமலிங்க ஜோதி நகரில் உள்ள மாநகராட்சி கட்டிடத்தை புனரமைத்து வார்டு அலுவலகமாக பயன்படுத்தவும்,



நாகப்ப தேவர் பகுதியில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தை புனரமைக்கவும் உத்தரவிட்டார்.



இராமநாதபுரம் பிரதான சாலை சந்திப்பில் பாதாள சாக்கடையின் பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பை உடனடியாக சரிசெய்ய அறிவுறுத்தினார்.



ஒலம்பஸ் பிரதான சாலையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை மாநகராட்சி பயன்பாட்டிற்கு கொண்டுவருவது குறித்தும் ஆணையாளர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, பணிகள் குழு தலைவர் சாந்தி முருகன், உதவி ஆணையர் செந்தில்குமரன், செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர்கள் நடராஜ், சக்திவேல், பாலச்சந்தர், சுகாதார ஆய்வாளர் ஜெகநாதன், சூயஸ் நிறுவன அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...