வால்பாறையில் கத்தி, அருவாளுடன் சுற்றித்திரிந்த மூவர் கைது

வால்பாறையில் கல்லூரி மாணவரை தாக்க முயன்று அரிவாளுடன் சுற்றித்திரிந்த மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். குடிபோதையில் இருந்த இவர்கள் மாணவரிடம் பணம், செல்போனை பறித்துள்ளனர்.



கோவை: வால்பாறையில் கல்லூரி மாணவரை தாக்க முயன்று அரிவாளுடன் சுற்றித்திரிந்த மூவரை வால்பாறை காவல்துறையினர் கைது செய்தனர்.

வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த வெள்ளியங்கிரியின் மகன் வெற்றிவேல் (18) நேற்று இரவு புதிய பேருந்து நிலையம் அருகில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ஹரிகரன் (19), ஆறுமுகம் (25), ஆனந்தராஜ் (19) ஆகிய மூவரும் குடிபோதையில் கத்தி, அருவாளுடன் சென்று மிரட்டி அவரைத் தாக்கி, கையில் இருந்த பணம் மற்றும் செல்போனை பறித்துள்ளனர்.

இது குறித்து வெற்றிவேல் வால்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் மற்றும் தனிப்பிரிவு காவல்துறையினர், மூவரையும் தேடிச் சென்றனர். முதலில் ஆறுமுகம் மற்றும் ஆனந்தராஜ் ஆகியோரை கைது செய்தனர்.

பின்னர், ஏ1 எதிரியான ஹரிஹரன் போலீசார் தேடி வருவதை அறிந்து தேயிலைத் தோட்டத்தில் ஓடினார்.



அப்போது கையில் பலத்த காயமடைந்து கீழே விழுந்து கிடந்த நிலையில் அவரை காவல்துறையினர் கைப்பற்றி கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...