மேட்டுப்பாளையம் நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு: அ.தி.மு.க கவுன்சிலர்கள் மீது வழக்கு

மேட்டுப்பாளையம் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் டம்ளர் வீசி, ஆவணங்களை கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் 9 அ.தி.மு.க கவுன்சிலர்களுக்கு தடை விதிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: மேட்டுப்பாளையம் நகராட்சியின் சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் மெஹரீபா பர்வீன் அஷ்ரப் அலி தலைமையில் நேற்று (செப்டம்பர் 27) நடைபெற்றது. கூட்டத்தில் 32 தீர்மானங்கள் மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டன.

கூட்டத்தில் மக்கள் பிரச்சினை குறித்து பேசும்போது அ.தி.மு.க மற்றும் தி.மு.க கவுன்சிலர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்போது, 7-வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் முகமது இப்ராஹீம் (சலீம்) தண்ணீர் குடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த சில்வர் டம்ளரை தூக்கி தரையில் வீசினார். அது தெறித்து நகர் மன்ற தலைவர் மற்றும் கமிஷனர் அருகில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தொடர்ந்து இரு கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 18-வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் சுனில்குமார் ஆவேசமாக மன்றத்தின் முன் வைக்கப்பட்ட தீர்மான நகலை கிழித்து வீசினார். இதனையடுத்து போலீசார் கூட்ட அரங்கில் நுழைந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், நகராட்சி தலைவர் மெஹரீபா பர்வீன் அஷ்ரப் அலி, அ.தி.மு.க கவுன்சிலர்களின் வன்முறை போக்கை கண்டித்து, வரும் இரு கூட்டத் தொடர்களில் 9 அ.தி.மு.க கவுன்சிலர்கள் பங்கேற்க தடை விதித்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து அ.தி.மு.க கவுன்சிலர்கள் நகர்மன்ற கூட்ட அரங்கிலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, நகராட்சி அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். நகராட்சி தலைவர், கமிஷனர், காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் அ.தி.மு.க கவுன்சிலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இரவில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் கூட்ட அரங்கை விட்டு வெளியேறினர்.

நகராட்சி கமிஷனர் அமுதா அளித்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் 9 அ.தி.மு.க கவுன்சிலர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மிரட்டுதல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...