14 ஆண்டுகளுக்குப் பிறகு மாமியார் கொலை வழக்கில் குற்றவாளி கைது

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே 2010ல் நடந்த மாமியார் கொலை வழக்கில் 14 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே வேடப்பட்டியில் 14 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மாமியார் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகா மாநிலம் மங்களூரில் மறைந்திருந்த குற்றவாளியை மடத்துக்குளம் காவல்துறையினர் கைது செய்தனர்.

2010 ஆம் ஆண்டு, மடத்துக்குளம் அருகே வேடப்பட்டியில் வசித்து வந்த ராஜன் (45) என்பவர் குடும்பத் தகராறில் தனது மனைவி பத்மாவதி மற்றும் மாமியார் காளியம்மாள் (50) ஆகியோரை அரிவாளால் தாக்கினார். இதில் படுகாயமடைந்த காளியம்மாள் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இச்சம்பவத்திற்குப் பின் ராஜன் தலைமறைவானார்.



இந்நிலையில், ரகசிய தகவலின் அடிப்படையில் கர்நாடகா மாநிலம் மங்களூர் பகுதியில் பதுங்கியிருந்த ராஜனை மடத்துக்குளம் காவல்துறையினர் கைது செய்தனர். ராஜன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

14 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளியைக் கைது செய்த மடத்துக்குளம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினருக்கு மாவட்ட காவல் துறை சார்பாக டிஎஸ்பி ஆறுமுகம் பாராட்டு தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...