கோவை இடிகரையில் முதன்முறையாக வள்ளி கும்மியுடன் காவடி ஆட்டம்: திரளான மக்கள் கூட்டம்

கோவை இடிகரையில் முதன்முறையாக இடிகரை கிராமிய கலைக்குழுவினர் வள்ளி கும்மி நடனத்துடன் காவடி ஆட்டம் நிகழ்த்தினர். சுற்றுப்புற பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.



கோவை: கோவை இடிகரையில் முதன்முதலாக இடிகரை கிராமிய கலைக்குழுவினரின் வள்ளி கும்மி நடனத்துடன் காவடி ஆட்டம் அரங்கேறியது. இந்த நிகழ்ச்சியை காண சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் வந்திருந்து கண்டு களித்தனர்.

தமிழகத்தின் பாரம்பரிய நடனமான வள்ளி கும்மி நடனம் தற்போது பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. கோவை இடிகரையில் இடிகரை கிராமிய கலைக்குழுவினரின் முதல் வள்ளி கும்மி அரங்கேற்று விழா நடைபெற்றது.

கோவை துடியலூர் அடுத்துள்ள இடிகரை கிராமத்தில் இடிகரை கிராமிய கலைக்குழு என்ற பெயரில் பொதுமக்கள் ஒன்றிணைந்து கலைக்குழுவை உருவாக்கினர். இதில் 100க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் தாங்களாகவே வள்ளி கும்மி நடனங்கள் ஆடி பயிற்சி எடுத்து வந்தனர்.



இந்த முதல் அரங்கேற்ற விழாவில் வள்ளி கும்மி நடனத்துடன் காவடியாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான நடனங்கள் நிகழ்த்தப்பட்டன.



முதன் முதலாக வள்ளி கும்மி நடனத்தில் காவடி எடுத்துக்கொண்டு முருகன் பாடல்களுக்கு 60க்கும் மேற்பட்ட 6 வயது முதல் 65 வயது வரையிலான பெண்கள் நடனம் ஆடினர்.

மேலும், கோல் அடித்துக்கொண்டு பெண்கள் நடனம் ஆடியபோது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்த நிகழ்ச்சியை இடிகரை, செங்காளிபாளையம், மணியகாரம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்துக்கொண்டு கண்டு ரசித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...