உடுமலையில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் மாவட்ட மாநாடு: பென்ஷன் உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்

உடுமலையில் நடைபெற்ற இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாட்டில், பென்ஷன் தொழிலாளர்களுக்கு ரூ.3000 உதவித்தொகை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுமான தொழிலாளர் பென்சன் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட மாநாடு நடைபெற்றது.



மாநில தொழிற்சங்க அமைப்பாளர் குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாடு, உடுமலை குட்டைத்தடல் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து தொடங்கியது.



மாநாட்டில் மாநில செயலாளர் பாஸ்கரன் மற்றும் மாநிலத் துணைத் தலைவர் பாலன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் பாஸ்கரன், பென்ஷன் தொழிலாளர்களுக்கு உதவித்தொகை ரூ.3000 வழங்க வேண்டும் என்றும், தொழிலாளர்களுக்கு இயற்கை மரண உதவித்தொகை ரூ.25,000 வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், தொழிலாளர்களுக்கு இலவச வீடு கட்டும் திட்டம் மற்றும் இலவச மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளதால், பள்ளி மற்றும் கல்லூரி அருகில் உள்ள மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கணக்கம்பாளையம் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க கூடாது என்ற கோரிக்கையையும் முன்வைத்தார். தமிழக துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றதற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதற்கு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு செல்லும் பொருட்களின் ஏற்றுமதியை நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

இந்த மாநாட்டில் திருப்பூர் மாவட்ட செயலாளர் மூர்த்தி, மாநில குழு உறுப்பினர் அப்பாஸ், தொழிற்சங்க நிர்வாகி பால் நாராயணன், தொழிற்சங்க அமைப்பாளர் சுந்தர்ராஜ், மகளிர் அமைப்பாளர் வைதேகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...