கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் மது போதையில் நண்பர்களால் இளைஞர் கல்லால் தாக்கி கொலை

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் மது போதையில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், கண்ணன் என்ற இளைஞர் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Coimbatore: கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் வளமீட்பு பூங்காவை ஒட்டிய பகுதியில் ஒரு இளைஞர் தலையில் படுகாயங்களுடன் பிணமாக கிடப்பதாக பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் கோவை, சித்தாபுதூர் வெங்கடசாமி ரோட்டைச் சேர்ந்த லோகநாதனின் மகன் கண்ணன் என்பது தெரியவந்தது. கண்ணன் தனது நண்பர்களான கார்த்திக், ரவீந்திரன், சதீஷ் உட்பட ஐந்து பேருடன் சித்தாப்புதூரில் உள்ள ஒரு பாரில் மது அருந்தியுள்ளார்.



பின்னர் வாடகை காரில் பெரியநாயக்கன்பாளையம் வளமீட்பு பூங்கா பகுதிக்கு வந்த அவர்கள், அங்கும் மது அருந்தினர். போதை தலைக்கேறியதும் கண்ணனுக்கும் நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த நண்பர்கள் கண்ணனை கருங்கல் மற்றும் பீர் பாட்டிலால் தலையிலும் வயிற்றிலும் பலமாக தாக்கினர். இதில் கண்ணன் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.

சம்பவத்திற்குப் பிறகு கண்ணனின் நண்பர்கள் தப்பியோடி விட்டனர். இந்த கொலை தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, கார்த்திக், ரவீந்திரன், சதீஷ் உள்பட 5 பேரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...