தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உணவு இழப்பு மற்றும் கழிவுகள் குறித்த விழிப்புணர்வு தினம்

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உணவு இழப்பு மற்றும் கழிவுகள் குறித்த விழிப்புணர்வு தினம் செப்டம்பர் 29 அன்று கொண்டாடப்பட்டது. விழிப்புணர்வு பேரணி, வினாடி-வினா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



Coimbatore: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உணவு இழப்பு மற்றும் கழிவுகள் குறித்த விழிப்புணர்வு தினம் செப்டம்பர் 29, 2024 அன்று கொண்டாடப்பட்டது. வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் உணவு பதன் செய் பொறியியல் துறையால் நிறுவப்பட்ட உணவுக்கழகத்தின் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த ஆண்டின் கருப்பொருள் "உணவு இழப்பு மற்றும் கழிவுகளைக் குறைப்பதற்கான கால நிலை நிதி" என்பதாகும். இது உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் காலநிலை மாற்றத்தைக் கணித்தல் போன்ற சவால்களை சமாளிக்க முதலீட்டின் அவசரத் தேவையை வலியுறுத்துகிறது.



விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக விழிப்புணர்வு பேரணி, வினாடி-வினா, சுவரொட்டி வழங்குதல், மீம் உருவாக்கம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் V. கீதாலட்சுமி, வேளாண்பொறியியல் முதன்மையர் முனைவர் A. ரவிராஜ், மாணவர் நலன் முதன்மையர் முனைவர் N. மரகதம், மற்றும் பேராசிரியர் முனைவர் M. பாலகிருஷ்ணன் ஆகியோர் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

உணவுப்பதப்படுத்துதல் துறைத்தலைவர், உணவுப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு உணவு இழப்பு மற்றும் கழிவுத்தடுப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். விழிப்புணர்வு பேரணியில் சுமார் 600 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு, உணவு இழப்பு மற்றும் கழிவுகளைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்ற முழக்கங்களை எழுப்பினர்.



இந்த விழிப்புணர்வு நிகழ்வு, உணவு இழப்பு மற்றும் கழிவுகளின் தாக்கத்தை குறைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதோடு, இந்த பிரச்சினையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாணவர்களை ஊக்குவித்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...