மாதப்பூர் விவசாயிகளுக்கு வழித்தடம் கோரி ஆட்சியரிடம் திமுக செயலாளர் மனு

கோவை தெற்கு மாவட்டம் மாதப்பூர் ஊராட்சியில் இரயில்வே பணிகளால் வழித்தடம் இழந்த 18 குடும்பங்களுக்கு உதவக் கோரி, திமுக செயலாளர் தளபதி முருகேசன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.


Coimbatore: கோவை தெற்கு மாவட்டம், சூலூர் ஒன்றியம், மாதப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இரயில்வே எல்லைப் பணிகள் காரணமாக 18 குடும்பங்கள் தங்கள் வழித்தடத்தை இழந்துள்ளனர். இந்த நிலையில், அவர்களுக்கு மீண்டும் வழித்தடம் பெற்றுத்தர வேண்டும் என்று கோரி, கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தார்.

மாதப்பூர், தொட்டிய பாளையம், இராமாச்சியம்பாளையம் ஆகிய பகுதிகளில் இரயில்வே பாதை எல்லை பணிகளுக்காக இரயில்வே நிர்வாகம் தனியார் மற்றும் விவசாய நிலங்களை கையகப்படுத்தி தடுப்பு வேலிகள் அமைக்க குழிகள் தோண்டியுள்ளது. இதன் காரணமாக 18 குடும்பங்கள் தங்கள் வழித்தடத்தை இழந்துள்ளனர்.

இந்த நிலையை கண்டித்தும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எந்தவித இடர்பாடுகளும் இல்லாமல் அவர்களுடைய பாதைகளை மீண்டும் பெற்றுத்தர வேண்டும் என்றும் கோரி, சிங்காநல்லூரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தளபதி முருகேசன் இன்று (அக்டோபர் 4) மனு அளித்தார். மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அவர்களிடம் நேரில் சந்தித்து இந்த பிரச்சினையை எடுத்துரைத்த அவர், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...