கோவை தியாகி சண்முகா நகரில் குடியிருப்போர் கோரிக்கைகளை கேட்டறிந்த திமுக செயலாளர் நா.கார்த்திக்

கோவை தியாகி சண்முகா நகரில் திமுக செயலாளர் நா.கார்த்திக் குடியிருப்போரின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். பூங்கா, மழைநீர் வடிகால், தார்ச்சாலை, பாதாள சாக்கடை இணைப்பு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண உறுதியளித்தார்.


கோவை: கோவை மாநகர் மாவட்டம் சிங்காநல்லூர் பகுதி-2, வார்டு எண் 61, திருச்சி சாலையில் உள்ள தியாகி சண்முகா நகர் பகுதியில் உள்ள குடியிருப்போர் சங்க நிர்வாகிகள், அடுக்குமாடி குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிய கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் நேரில் சென்று சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, புதிய பூங்கா அமைத்தல், மழைநீர் வடிகால், தார்ச்சாலை, பாதாள சாக்கடை இணைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகளை குடியிருப்போர் முன்வைத்தனர். இந்த கோரிக்கைகளை உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வதாக நா. கார்த்திக் உறுதியளித்தார்.

இந்த சந்திப்பில் கிழக்கு மண்டல உதவி ஆணையர் முத்துசாமி, சிங்காநல்லூர் பகுதி 2 செயலாளர் சிங்கை மு.சிவா, மாமன்ற உறுப்பினர் ஆதி மகேஸ்வரி, வட்டக்கழக செயலாளர்கள் தென்னவர் செல்வராஜ், அன்பு, இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஹட்கோ ஜெயராமன், வார்டு நிர்வாகிகள் பூங்கொடி, கவியரசு, கலைச்செல்வன், கருணாநிதி, கழக நிர்வாகிகள், நகர்நலச் சங்க நிர்வாகிகள், அடுக்குமாடி குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...