பொள்ளாச்சி அருகே சிறுத்தை தாக்குதல்: கன்று குட்டி காயம்

பொள்ளாச்சி அருகே புளியங்காண்டியில் தனியார் தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை கன்று குட்டியை தாக்கியது. வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் அச்சம்.



கோவை: பொள்ளாச்சியை அடுத்த புளியங்காண்டி பகுதியில் தனியார் தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை ஒன்று கன்று குட்டியை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியின் அடிவாரத்தில் விவசாய தோட்டங்களும், குடியிருப்பு நிலங்களும் உள்ளன. இப்பகுதியில் அவ்வப்போது காட்டில் இருந்து வரும் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.

நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் புளியங்காண்டி அருகே சுபாஷினி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. இதனையடுத்து தோட்டத்தில் உள்ளவர்கள் அங்கு சென்று பார்த்தபோது, சிறுத்தை ஒன்று கன்று குட்டியை வேட்டையாட முயற்சித்துள்ளது. தோட்டத்தில் பணிபுரிபவர்கள் உடனடியாக சிறுத்தையை அங்கிருந்து விரட்டினர்.



சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



சிறுத்தை தாக்கியதில் கன்று குட்டி மற்றும் தோட்டத்தில் உள்ள நாய் ஆகியவை லேசான காயங்களுடன் உயிர்தப்பின. காயம்பட்ட விலங்குகளுக்கு கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்து வருகிறார்.

குடியிருப்பு பகுதிக்கு அருகில் சிறுத்தை நடமாடுவதால் அச்சமடைந்த பொதுமக்கள், அதனை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...