கோவையில் பல்வேறு பகுதிகளில் கனமழை: போக்குவரத்து நெரிசல்

கோவை ரேஸ்கோர்ஸ் மற்றும் சிங்காநல்லூர் பகுதிகளில் கனமழை காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.


கோவை: கோவையில் இன்று (அக்டோபர் 11) பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ரேஸ்கோர்ஸ் பகுதியில் பெய்யும் மழையின் காரணமாக நான்கு சக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் நெடுந்தூரம் வரிசையில் நிற்கின்றனர். இதனால் இப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து காவல்துறையினர் வந்தால் மட்டுமே போக்குவரத்தை சரி செய்ய முடியும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.



சிங்காநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலாக கரு மேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசி வந்த நிலையில், தற்போது திடீரென கனமழை பெய்து வருகிறது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

திடீர் மழையால் இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். பலர் தங்கள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு மழைக்காக ஒதுங்கி நிற்கின்றனர்.

மழை தொடர்ந்து பெய்து வருவதால், வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த காவல்துறையினரின் உதவி தேவைப்படுவதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...