கோவை அரசு மேல்நிலைப்பள்ளியில் தேங்கிய மழைநீர்: மாணவர்கள் அவதி

கோவை கணபதி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவதிப்படுகின்றனர். பெற்றோர்கள் நோய்த் தொற்று அபாயம் குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.



கோவை: கோவை மாநகர் பகுதியில் நேற்று மாலை சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக கன மழை பெய்ததால் கோவை கணபதி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.



இதனால் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மிகவும் அவதி அடைந்துள்ளனர்.



குழந்தைகளுக்கு நோய்த் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் வேதனையை தெரிவித்தனர். இதனால் பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்புவதற்கு அச்சமாக இருப்பதாக கூறுகின்றனர்.



மேலும், பள்ளி வளாகத்துக்கு வெளியே ஆங்காங்கே சாக்கடைத்து விடுவாறும் பணி நடைபெற்று வருவதால் சாக்கடை கழிவுநீர் தெருவில் ஓடுவதால் பள்ளி மாணவ மாணவிகள் மிகவும் அவதி அடைந்துள்ளனர்.

ஒருபுறம் பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கி நிற்பதனாலும் மறுபுறம் பள்ளி வளாகத்திற்கு வெளியே சாக்கடை சரிவர தூர்வாரததால் ஆசிரியர்கள், பள்ளி மாணவ மாணவிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்த நிலையில், உடனடியாக மழைநீர் வடிகால் வசதி மற்றும் சாக்கடை பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளி நிர்வாகமும் இது தொடர்பாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...