கோவையில் பட்டாசு கடைகளில் லஞ்சம் வாங்குவோர் மீது புகார் அளிக்க வாட்ஸ்அப் எண் அறிவிப்பு

கோவை மாநகர காவல்துறை, பட்டாசு கடைகளில் அதிகாரத்தை பயன்படுத்தி லஞ்சம் வாங்குவோர் மீது புகார் அளிக்க வாட்ஸ்அப் எண்ணை அறிவித்துள்ளது. புகார்களின் ரகசியம் காக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.


கோவை: கோவை மாநகர காவல்துறை, தீபாவளியை முன்னிட்டு பட்டாசு கடைகளில் லஞ்சம் வாங்குவோர் மீது புகார் அளிக்க வாட்ஸ்அப் எண்ணை அறிவித்துள்ளது.

கோவை மாநகர காவல்துறை தனது அதிகாரப்பூர்வ Facebook பக்கத்தில் இன்று (அக்டோபர் 15) வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவையில் உள்ள பட்டாசு கடைகளில் அரசு ஊழியர்கள், பத்திரிக்கையாளர்கள், ஊடகத்தினர், அரசியல் கட்சியினர் மற்றும் சாதி/மத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் யாரேனும் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி பணம் அல்லது பரிசுப் பொருட்கள் பெற முயற்சித்தால், அது குறித்து புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளது.



இது தொடர்பான புகார்களை 81900-00100 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பலாம் என்றும், புகார் அளிப்பவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் கோவை மாநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு பெறப்படும் புகார்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புகார் அளிப்பவரின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் காவல்துறை உறுதியளித்துள்ளது.

இந்த முயற்சி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனையில் ஏற்படக்கூடிய முறைகேடுகளைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...