மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு; அதிகாரிகள் சீரமைப்பு பணியில் தீவிரம்

வடகிழக்கு பருவமழை காரணமாக மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் ராட்சத மரம் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



கோவை: வடகிழக்கு பருவமழை காரணமாக மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் கல்லாறு அருகே ராட்சத மரம் சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினர் சாலையை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், மேட்டுப்பாளையம் நகரில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கமும், இரவு நேரங்களில் தொடர்ந்து மழையும் பெய்து வருகிறது.



இந்த சூழ்நிலையில், மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் கல்லாறு முதல் கொண்டை ஊசி வளைவு, இரண்டாவது கொண்டை ஊசி வளைவு இடையே திடீரென சாலையோரத்தில் இருந்த ராட்சத மரம் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது.



இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சாலையின் இரு புறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டன.



இது குறித்த தகவல் கிடைத்ததும், மேட்டுப்பாளையம் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்புத் துறையினர் பவர் சா மூலம் சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த மரத்தை துண்டு துண்டாக வெட்டி அகற்றினர். வெட்டிய மரத்துண்டுகள் ஜேசிபி வாகனம் மூலம் சாலையோரத்துக்கு அகற்றப்பட்டன.



கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல், சக்தி வாய்ந்த விளக்குகளின் உதவியுடன் சாலையை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காலையில் சீரமைப்பு பணிகள் முடிந்த பின்னரே மீண்டும் அந்த வழியே போக்குவரத்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...