திருப்பூரில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்: சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

திருப்பூரில் கன மழையால் பழவஞ்சிபாளையம் காலனி பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. நிரந்தர தீர்வு கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாநகரில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, வீரபாண்டி அருகே உள்ள பழவஞ்சிபாளையம் காலனி பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

இப்பகுதியில் 40-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியதால், அனைத்து வீடுகளிலும் மழைநீர் நிரம்பியது. குறிப்பாக, குழந்தைகள் உள்ள குடும்பங்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின.

வீடுகளுக்கு அருகில் உள்ள குட்டை பகுதியில் புதிதாக வீரபாண்டி காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதற்காக குட்டைப் பகுதியில் மண் கொட்டி மேடுபடுத்தியுள்ளனர். இதனால் குட்டையில் உள்ள தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மழைக்காலம் தொடங்கியுள்ளதால், எப்போது வேண்டுமானாலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளதாக மக்கள் கவலை தெரிவித்தனர்.



இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்லடம்-திருப்பூர் பிரதான சாலையில் உள்ள வீரபாண்டி சிக்னல் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், உயர் அதிகாரிகள், மாநகராட்சி மேயர் மற்றும் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.



இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...