உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல், உடுமலை–பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் பரப்புரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள ஒதுக்கப்பட்ட இடத்திற்கு மாறாக வேறு இடத்தில் பரப்புரை நடத்தியதாக, அதிமுக சார்பிலான வழக்கறிஞர்கள் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.



தேர்தல் ஆணையம் மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள வெங்கடகிருஷ்ணா சாலையில் பிரச்சாரம் நடத்த அனுமதி வழங்கியிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல், உடுமலை–பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் பரப்புரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதை கண்டித்து, உடுமலை அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த தேர்தல் பொதுப் பார்வையாளர் ஸ்ரீ வத்சவாவிடம், திருப்பூர் மாவட்ட முன்னாள் ஆவின் தலைவரும் வழக்கறிஞருமான மனோகரன் தலைமையில் அதிமுக வழக்கறிஞர்கள் குழு புகார் மனு அளித்தனர்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், உடுமலை பகுதியில் பரப்புரை நடத்த ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அனுமதி மறுக்கப்பட்ட கோவை–திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பிரச்சாரம் நடத்த ஏற்பாடுகள் செய்திருப்பது கண்டனத்திற்குரியது என தெரிவித்தனர்.

மேலும், சட்டத்திற்கு புறம்பாக பரப்புரை மேற்கொள்ளும் திமுகவினர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட இடத்திலேயே பிரச்சாரம் நடத்தச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...