சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு தொகுதிகளில் திமுக வெற்றி பெறுவதே முக்கியம் என கூறி மக்களிடம் ஆதரவு கோரினார்.


Coimbatore: கொங்கு பகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி தீவிர பரப்புரை மேற்கொண்டு வரும் துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், இன்று மாலை கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.



அப்போது கோவை தெற்கு மற்றும் கோவை வடக்கு தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் செந்தில் பாலாஜி மற்றும் செந்தமிழ் செல்வன் ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

பொதுமக்களிடம் பேசிய அவர், தான் போட்டியிடும் சேப்பாக்கம் தொகுதியில் ஒருமுறை மட்டுமே பிரச்சாரத்திற்கு சென்றதாகவும், கோவை தெற்கு மற்றும் வடக்கு வேட்பாளர்களின் வெற்றியே தற்போது முக்கியம் என்பதற்காகவே கோவைக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.



மேலும், சேப்பாக்கத்தில் தாம் வெற்றி பெறுவதை விட கோவை தெற்கு, வடக்கு தொகுதிகளில் திமுக வெற்றி பெறுவதே முக்கியம் என்றும் கூறினார். கடந்த முறை இந்த தொகுதிகளில் திமுக தோல்வியடைந்த நிலையில், இந்த முறை அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...