அதிமுக கூட்டணி?: தவெகவை நம்பி வாக்களித்த மக்களிடையே அதிருப்தி ஏற்படும்- காங்கிரஸ் தலைவர் கருத்து

ஊழலற்ற ஆட்சியை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் வாக்களித்துள்ளனர், எனவே த.வெ.க மற்றும் அதிமுக இடையிலான கூட்டணி குறித்து வெளியாகும் தகவல்கள் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் என்று மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார் தெரிவித்துள்ளார்.


சென்னை: தமிழக மக்கள் ஊழலுக்கும், பாஜக அரசின் மதவாத அரசியலுக்கும் எதிராக மற்றும் மாற்றத்தை விரும்பி த.வெ.க-வுக்கு வெற்றியை வழங்கியுள்ள நிலையில், அதிமுகவுடனான கூட்டணி குறித்து எழும் தகவல்கள் மக்களிடையே அதிருப்தியை உருவாக்கும் என மாநிலகாங்கிரஸ் பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

முதல்வராக பதவியேற்ற பின்னர் அனைத்து கட்சி தலைவர்களையும் நேரில் சந்தித்து அரசியல் நாகரிகத்தை வெளிப்படுத்திய தவெக தலைவர்விஜயின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், அதிமுக நிர்வாகிகளான எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோரை நேரில் சந்தித்தது, த.வெ.க-வுக்கு வாக்களித்த மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பத்து ஆண்டுகளாக பாஜகவுடன் கூட்டணியில் இருந்த அதிமுக, ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் வேறு வழக்குகளில் சிக்கியிருந்ததாகவும், அத்தகைய கட்சியுடன் கூட்டணி அமைப்பது மக்களின் எதிர்பார்ப்புக்கு எதிரானதாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஊடகங்களில் வெளியாகும் தகவல்களைப் போல அதிமுகவின் ஒரு பிரிவினருடன் கூட்டணி அமைத்து அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டால், இதுவரை ஆட்சி செய்த ஊழல் கட்சிகளுக்கும் தற்போதைய அரசுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்ற எண்ணம் மக்களிடையே உருவாகும் என்றும் எச்சரித்துள்ளார்.

எனவே, த.வெ.க அரசு தனது முடிவுகளை மறுபரிசீலனை செய்து, ஊழலற்ற மற்றும் நேர்மையான ஆட்சியை வழங்க உறுதியாக இருக்க வேண்டும் என்றும் கணபதி சிவக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...