“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா உருவாக்கிய அதிமுக இயக்கத்தை பலவீனப்படுத்துவதாக விமர்சித்தார்.


Coimbatore:

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய செயல்பாடுகள், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை பலவீனப்படுத்தி வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், புதிய அரசு பொறுப்பேற்று இரண்டு நாட்களே ஆன நிலையில் அனைத்து கேள்விகளுக்கும் உடனடியாக பதில் அளிக்க முடியாது என்று தெரிவித்தார்.

“துறைகள் தற்போது தான் ஒதுக்கப்பட்டுள்ளன. அரசின் செயல்பாடுகள் படிப்படியாக முன்னேறும். வீட்டுப் பொருளாதாரம் குறித்து திடீரென கேள்வி கேட்டால் உடனே எல்லாவற்றையும் சொல்ல முடியாததைப் போல, அரசின் நிர்வாகமும் கட்டுக்கோப்பாக முன்னேறும்,” என்றார்.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் ஆரம்ப நடவடிக்கைகளைப் பற்றி பேசிய அவர், 200 யூனிட் இலவச மின்சார திட்டத்திற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறினார். பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளிலும் அரசு கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.

மேலும், பேருந்து நிலையங்கள் மற்றும் கோவில்கள் அருகே இருந்த 717 டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், இது பொதுமக்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்றும் கூறினார்.

“முதலமைச்சர் விஜய் போன்றவர் மட்டுமே பதவியேற்ற உடனேயே இவ்வளவு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்,” என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

அதிமுக குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகளை பார்க்கும் போது, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதா உருவாக்கிய அதிமுக இயக்கம் பலவீனமடைந்துள்ளது போல தெரிகிறது,” என்றார்.

“நான் தான் எல்லாம் என்ற எண்ணத்தில் அவர் செயல்படுகிறார். காலம் அதற்கான பதிலை சொல்லும்,” என்றும் அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்தார்.

எதிர்கால அரசியல் அமைப்பில் அதிமுகவுக்கு அமைச்சரவை பொறுப்புகள் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, “இதுவரை அதுபற்றி எதுவும் கூறப்படவில்லை,” என்று அவர் பதிலளித்தார்.

அமைச்சர் செங்கோட்டையனின் இந்த கருத்துகள், அதிமுகவில் நிலவி வரும் உள்கட்சி விவாதங்கள் மற்றும் அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...