கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய்யப்பட்டு ரகசியமாக புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை:

கோவை இருகூர் அருகே மீன் பிடிக்கச் சென்ற 13 வயது பள்ளி மாணவன், அவனது சக நண்பர்களாலேயே தாக்கிக் கொலை செய்யப்பட்டு ரகசியமாக புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



இருகூர் நியூ காலனி பகுதியைச் சேர்ந்த பாரதிராஜாவின் மகன், ஆர்.ஜி. புதூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். கோடை விடுமுறை காரணமாக வீட்டில் இருந்த அந்தச் சிறுவன், கடந்த 15ஆம் தேதி நண்பர்களுடன் இருகூர் மாசாணி அம்மன் கோவில் அருகே உள்ள வாய்க்காலுக்கு மீன் பிடிக்கச் சென்றதாக கூறப்படுகிறது.

இரவு நீண்ட நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர், அவனுடன் சென்ற நண்பர்களிடம் விசாரித்துள்ளனர். அப்போது, “யாரோ ஒருவருடன் அவன் தனியாகச் சென்றான்” என அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல் அளித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் சிறுவன் மாயமானதாக பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிறுவனுடன் கடைசியாக இருந்த நண்பர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், வாய்க்காலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது சிறுவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகவும், ஆத்திரமடைந்த இரண்டு சிறுவர்கள் அங்கு கிடந்த காலி மதுபாட்டிலால் மாணவனின் தலையில் தாக்கியதாகவும் தெரியவந்தது. பலத்த காயமடைந்த மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் மாட்டிக் கொள்ளக் கூடாது என்ற பயத்தில், உடலை அருகிலேயே குழி தோண்டி புதைத்து விட்டு வீட்டிற்கு திரும்பியதாக கூறப்படுகிறது.

சிறுவர்கள் காட்டிய இடத்தில் இன்று காலை போலீசார் உடலை தோண்டி எடுத்து மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் இருகூர் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட இரண்டு சிறுவர்களிடமும் கொலைக்கான பின்னணி குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...