கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் IPS சம்பவ இடத்திற்கும் காவல் நிலையத்திற்கும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.


coimbatore: சூலூர் அருகே கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போயிருந்த சிறுமி, கண்ணம்பாளையம் குளம் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். முதற்கட்ட விசாரணையில், சிறுமி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சிறுமியின் உடற்கூராய்வு இன்று நடைபெற்று முடிந்துள்ளது.



இந்த சம்பவத்துக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் சிறுமியின் பெற்றோர் தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு தமிழக காவல் துறைத் தலைவர் சந்தீப் ராய் ரத்தோர் கோவைக்கு நேரில் வருகை தந்தார்.



சிறுமியின் உடல் மீட்கப்பட்ட சூலூர் அருகேயுள்ள கண்ணம்பாளையம் குளம் பகுதிக்குச் சென்று சம்பவ இடத்தை ஆய்வு செய்தார்.



அப்போது, குற்றவாளிகள் எந்த வழியாக வந்திருக்கக்கூடும், சம்பவ இடத்தில் இருந்து முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து உயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.



இதனைத் தொடர்ந்து, சூலூர் காவல் நிலையத்திற்குச் சென்ற டிஜிபி, இவ்வழக்கில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணை நடவடிக்கைகள் மற்றும் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் தொடர்பான தகவல்கள் குறித்து அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...